எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள மேட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கமல். இவர் வெளியூரில் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவருைடய மனைவி சரண்யா(வயது 26). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த கமலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் சரண்யா தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறி தனது குழந்தையுடன் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கமல் கொடுத்த புகாரின் பேரில் உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.