சிறுமி தவறவிட்ட 4 பவுன் தங்க சங்கிலி மீட்பு

திருச்செந்தூர் கடலில் சிறுமி தவறவிட்ட 4 பவுன் தங்க சங்கிலி மீட்கப்பட்டது.;

Update: 2023-09-02 18:45 GMT

திருச்செந்தூர்:

சென்னையை சேர்ந்தவர் ராமசாமி (வயது 35). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். அப்போது குடும்பத்துடன் கடலில் குளித்தனர். அப்போது ராமசாமி மகள் ஸ்ரீநிதிஷ்கா (11) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலி கடலி தவறி விழுந்தது. இதுகுறித்து கோவில் கடல் பாதுகாப்பு குழுவினரிடம் தெரிவித்தனர்.

இந்த குழுவை சேர்ந்த சிவராஜா தலைமையில் கடல் பாதுகாப்பு குழுவினர் மற்றும் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் ஆகியோர் தவறி விழுந்த தங்க செயினை கடலில் தேடினர். பல மணி நேரம் தேடுதலுக்கு பின்னர், சிப்பி அரிக்கும் தொழிலாளி முனீஈஸ்வரன் நேற்று கடலில் கிடந்த தங்க சங்கிலியை கண்டெடுத்தார். பின்னர் கோவில் போலீசார் முன்னிலையில் ராமசாமியிடம் தங்க சங்கிலி ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்