ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள் - நினைவகத்தில் குடும்பத்தினர் மரியாதை

ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள் முன்னிட்டு தேசிய நினைவகத்தில் குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர்.;

Update: 2022-10-15 04:59 GMT

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரம் அருகே அமைந்துள்ள மறைந்த இந்திய முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் இன்று அப்துல் கலாமின் 91 வது பிறந்தநாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியையடுத்து தேசிய நினைவகத்தில் அமைந்துள்ள ஏ.பி.ஜெ அப்துல் கலாம் சமாதி முன்பு ராமேஸ்வரம் பள்ளிவாசல் ஆலிம்சா அப்துல் ரகுமான் தலைமையில் துவா நடைபெற்றது.

அப்துல் கலாம் சமாதி முன்பு அரை மணி நேரம் நடைபெற்ற துவா சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகளும் அப்துல் கலாம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டு அதன் பின்னர் அப்துல் கலாம் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் மற்றும் ஏபிஜெ அப்துல் கலாம் குடும்பத்தைச் சேர்ந்த அவரது பேரன்கள் ஷேக் சலீம், ஷேக் தாவூத், அவரது அண்ணன் மகள் ஆயிஷா பேகம்,மகன் ஜெயினுலாதீன், மற்றும் உறவினர்கள் நிஜாமுதீன் மற்றும் நடிகர் தாமு மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறியாளர் முருகன், மணிகண்டன், தேசிய நினைவுக டி.ஆர்.டி.ஓ சார்பில் பொறுப்பாளர் அன்பழகன்,சமூக ஆர்வாளர் பழனிச்சாமி, உட்பட ஜமாத் நிர்வாகிகள் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்