மலையில் மர்ம நபர்கள் தீ வைப்பு
கொடைக்கல் பகுதியில் உள்ள மலையில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
சோளிங்கரை அடுத்த கொடைக்கல் ஆவின் பால் நிலையம் அருகில் உள்ள மலைப்பகுதியில் அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளது. இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் நேற்று முன்தினம் மலையில் தீ வைத்துள்ளனர். இதனால் காய்ந்த மஞ்சம்புற்கள் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கி, மலை முழுவதும் பரவியது. இதில் மூலிகை செடிகள், மரங்கள் தீயில் எரிந்து கருகி சாம்பலானது. மர்ம நபர்கள் தீ வைப்பது தொடர்கதையாக உள்ளது. மலைக்கு தீ வைக்கும் மர்ம நபர்களை கணட்றிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.