திசையன்விளை அருகே இலையே வராமல் குலை தள்ளிய அதிசய வாழை...!

அதிசய வாழையை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Update: 2022-11-05 03:02 GMT

திசையன்விளை,

திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழியை சேர்ந்தவர் சிவராமலிங்கம் (வயது 44), விவசாயி. இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் சக்கை ரக வாழைகளை பயிரிட்டு உள்ளார்.

ஏதாவது கன்று பட்டுபோனால் அதற்கு பயன்படுத்துவதற்காக மாற்று வாழைக்கன்றுகளை அவர் வைத்திருந்தார். அதில் ஒரு வாழைக்கன்றில் ஒரு இலை கூட வருவதற்கள் குலை தள்ளி உள்ளது.

ஒரு அடி உயரம் உள்ள அந்த அதிசய வாழையை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்

Tags:    

மேலும் செய்திகள்