வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் சிறார்கள் தப்பியோடிய விவகாரம் - சேலத்தில் தானாக வந்து சரணடைந்த சிறுவன்
சேலத்தில் சரணடைந்த சிறுவனை மீட்டு செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் ஒப்படைத்தனர்.
வேலூர்,
வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து கடந்த மாதம் 27-ந்தேதி 6 சிறார் கைதிகள் தப்பியோடினர். இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து சிறுவர்களை தேடி வந்த போலீசார், தப்பியோடிய 4 சிறார்களை கைது செய்தனர்.
இந்நிலையில் மீதம் உள்ள 2 சிறார்களில் ஒருவர் இன்று சேலம் சிறார் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அந்த சிறுவனை மீட்டு செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்த போலீசார், தலைமறைவாக இருந்து வரும் மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.