அமைச்சர் எ.வ.வேலு தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

அமைச்சர் எ.வ.வேலு தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2022-10-02 18:42 GMT

தி.மு.க. அமைப்பு தேர்தலில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 5-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எ.வ.வேலு நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர், புதிய நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் காரில் ஊர்வலமாக சென்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, பெரியார், அண்ணா, காந்தி, காமராஜர் ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் கட்சி அலுவலகத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் எ.வ.வேலுக்கு மாலைகள், சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அவைத்தலைவர் த.வேணுகோபால், மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட துணைத்தலைவர் பிரியா விஜயரங்கன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணி, பரிமளா கலையரசன், பொன்னி சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் மு.பன்னீர்செல்வம், கோ.ரமேஷ், பி.கோவிந்தன், ஆராஞ்சி ஆறுமுகம், மாவட்ட அரசு வழக்கறிஞர் கே.வி.மனோகரன், கூட்டுறவு வங்கியின் சட்ட ஆலோசகர் வெற்றி டிஜிட்டல் கார்த்திகேயன், அருணை கன்ஸ்ட்ரக்சன் துரை வெங்கட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்