அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை சிவகங்கை மாவட்டத்திற்கு வர உள்ளார். மேலும் அவர் அங்கு பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிடுகிறார் என அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கூறினார்.

Update: 2022-12-22 18:45 GMT

காரைக்குடி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை சிவகங்கை மாவட்டத்திற்கு வர உள்ளார். மேலும் அவர் அங்கு பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிடுகிறார் என அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கூறினார்.

வேலைவாய்ப்பு முகாம்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நாளை(சனிக்கிழமை) சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) காரைக்குடியில் தங்குகிறார்.

நாளை காலை 9.30 அளவில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை, இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் பணியை தொடங்கி வைக்கிறார். 10.30 மணி அளவில் காரைக்குடி செல்லப்பா வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, பணி நியமன ஆணைகளை வழங்கியும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்களை வழங்கியும் பேசுகிறார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதியம் 12 மணியளவில் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் இல்லத்தில் அவரது உடல் நலம் விசாரிக்கிறார். 2.30 மணி அளவில் திருப்பத்தூர் தொகுதி குமாரப்பட்டி சிறுகூடல்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நடைபெற்று வரும் கட்டிட பணிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து சிவகங்கை தாலுகா ஒக்கூர் இலங்கை தமிழர் முகாமில் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிடுகிறார். மாலை 3.30 மணி அளவில் சிவகங்கை விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு காரைக்குடியில், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

பின்னர் காரைக்குடியிலிருந்து கார் மூலம் திருப்பத்தூர், சிங்கம்புணரி வழியாக கோவை புறப்பட்டு செல்கிறார். அமைச்சரவையில் பதவியேற்று முதன்முறையாக சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்