அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக பங்கேற்க அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2023-07-15 19:28 GMT

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக பங்கேற்க அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். ஆம்பூர் நகரில் காலை 9 மணிக்கு முத்தமிழறிஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 அடி கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.

அதனை தொடர்ந்து காலை 9.15 மணிக்கு வாணியம்பாடியில் சமூக வலைதள செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.

காலை 10 மணிக்கு 100 அடி உயர கொடி கம்பத்தில் கட்சிக்கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் பின்னர் 10.45 மணிக்கு செட்டியப்பனுர் கூட்டு ரோடு மற்றும் ஆசிரியர் நகர் கலைஞர் நூற்றாண்டு நிழற்கூடத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

நலத்திட்டங்கள்

காலை 11.00 மணிக்கு ஜோலார்பேட்டையில் அரசு நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

மேலும் மாலை 5 மணிக்கு திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு நடத்துகிறார். மாலை 7 மணிக்கு தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் நிகழ்ச்சியில் பங்கேற்று நல திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

எனவே, பொது மக்கள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்