ஒடிசாவில் உலகத்தரம் வாய்ந்த திறன் வளர்ப்பு பயிற்சி மையத்தை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டு திட்ட செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.;
புவனேஷ்வர்:,
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டு திட்ட செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
குறிப்பாக ஓடிசா மாநிலத்தில் இளைஞர்களின் திறனை மேம்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த திறன் வளர்ப்பு பயிற்சி மையத்தை பார்வையிட்டு, இளைஞர்களை தேர்வு செய்தல், திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்குதல், பல்வேறு நாடுகளில் இளைஞர்களை பணியமர்த்துதல் போன்ற செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.