அண்ணா சதுக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அண்ணா சதுக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

Update: 2023-06-10 05:16 GMT

சென்னை,

சென்னை அண்ணா சதுக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவுப் பேருந்து நிலையத்தை'அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 

சென்னை அண்ணா சதுக்கததில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி பெயரில் ரூ.1.20 கோடியில் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, எம்.பி.தயாநிதிமாறன், மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்