தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டிகளில், பதக்கங்களை வென்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகளப்போட்டிகளில், பதக்கங்களை வென்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-10 12:19 GMT

சென்னை,

தென் கொரியாவின் யெச்சியோனில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகளப்போட்டிகளில், பதக்கங்களை வென்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

தென் கொரியாவின் யெச்சியோனில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான 20 ஆவது ஆசிய தடகளப்போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்று ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை கனிஸ்தா டீனா, தம்பி சரண் மேகவர்ணம், தங்கைகள் அக்ஷயா & அபிநயா ஆகியோரை இன்று நேரில் வாழ்த்தினோம்.

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள இவ்வீரர்கள் இன்னும் பல சர்வதேச போட்டிகளில் சாதிக்க அரசு

துணை நிற்கும்.

Tags:    

மேலும் செய்திகள்