அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்

கந்திலி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-07-11 16:03 GMT

கந்திலி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் கெஜல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. துரைசாமி முன்னிலை வகித்தார்.

கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி.அசோக்குமார் தலைமை தாங்கி பேசுகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு அவருக்கு கந்திலி தெற்கு ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

அவர் பங்கேற்கும் பயணிகள் நிழற்கூடம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவதற்கான நபர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர்கள் பி.பிரபு, ராஜா, சம்பூர்ணம், மாவட்ட பிரதிநிதி பிரபாகரன், மனோகரன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், பார்த்திபன், நாகராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் பிற அணிகளின் மாவட்ட துணைத்தலைவர், துணை அமைப்பாளர்கள், கந்திலி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கந்திலி தெற்கு ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்