அமைச்சர் சுப்பிரமணியனுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
சிவகிரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு மாவட்ட எல்லையான சிவகிரியில் தி.மு.க.வினர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன், சிவகிரி நகர பஞ்சாயத்து தலைவர் கோமதிசங்கரி சுந்தர வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் வசதி வேண்டி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கணேஷ் குமார் சார்பில், அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.