அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை

அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.;

Update: 2022-09-26 20:53 GMT

சென்னை,

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. அவரின் உடன் பிறந்த அண்ணன் அண்ணன் பி.கே.தேவராஜ். இவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று அமைச்சர் சேகபாபுவின் அண்ணன் தேவராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தேவராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேவராஜ் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்