செந்தில் பாலாஜியை சந்திக்க அமைச்சர் சேகர் பாபுவுக்கு அனுமதி மறுப்பு

செந்தில் பாலாஜியை சந்திக்க அமைச்சர் சேகர் பாபுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-15 05:48 GMT

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் பாபுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நீதிமன்ற காவலில் இருப்பதால் செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தோம். உடனடியாக செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் அவரது உறவினர்களை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தோம். புழல்சிறை நிர்வாகம் அனுமதி கொடுத்தால் மட்டுமே செந்தில்பாலாஜியை சந்திக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்