அறுவை சிகிச்சைக்குப்பின் அமைச்சர் செந்தில் பாலாஜி கண் விழித்து பார்த்தார் - மருத்துவமனை நிர்வாகம்
மருத்துவமனையில், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது
சென்னை,
* செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை காலை 5.30 மணிக்கு தொடங்கியது.
* காவேரி மருத்துவமனை 7-வது தளத்தில் மூத்த மருத்துவர் ரகுராமன் தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
* காவேரி மருத்துவமனை முன்பு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
* அறுவை சிகிச்சை சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு காலை 10.30 மணியளவில் நிறைவு பெற்றது.
* செந்தில்பாலாஜியின் உடல் நிலை சீராக உள்ளதாக 10.14 மணிக்கு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
* செந்தில் பாலாஜி மாலை தான் சுயநினைவுக்கு வருவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இந்தநிலையில், "அறுவை சிகிச்சைக்குப்பின், அமைச்சர் செந்தில் பாலாஜி கண் விழித்து பார்த்தார் எனவும், மருத்துவமனையில், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.