துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி...
பாதுகாப்பு பணியிலிருந்த காவலரின் துப்பாக்கியை வாங்கி சுடுவதை போன்று அமைச்சர் செந்தில் பாலாஜி போஸ் கொடுத்தார்.;
கோவை,
கோவை காந்திபுரம் அருகே உள்ள சிறைச்சாலை மைதானத்தில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு பொருட்காட்சியின் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில் அப்போது குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வின் போது பாதுகாப்பு பணியிலிருந்த காவலரின் துப்பாக்கியை வாங்கி சுடுவதை போன்று அமைச்சர் போஸ் கொடுத்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் சமீரனை நோக்கி துப்பாக்கியை ஏந்தி போஸ் கொடுத்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.