அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் சிறை கைதி பதிவேடு எண்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-15 04:05 GMT

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கான பாதுகாப்பு பொறுப்பை நேற்றிரவு 10 மணியளவில் சிறைத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். சிறைத்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் வார்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.

இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது.

புழல் சிறையில் இருந்து விசாரணை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது.

* சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் எண், சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும்

* அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றி ஏராளமான ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்வையாளர்கள் பார்க்க புழல் சிறைத்துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு அனுமதிக்கப்படுவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்