வருவாய்த்துறை ஊழியர்களை கடிந்து கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான்

வருவாய்த்துறை ஊழியர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கடிந்து கொண்டாா்.

Update: 2023-01-28 18:45 GMT

செஞ்சி:

செஞ்சி அருகே அனந்தபுரத்தில் முஸ்லிம்களுக்கான சுடுகாடு உள்ள பகுதி பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. எனவே சுடுகாட்டு பகுதியை அளந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு நிரந்தர தீர்வு காண அமைச்சர் செஞ்சி மஸ்தான் உத்தரவிட்டார்.

அதன்படி வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் நேரில் சென்று சுடுகாடு உள்ள பகுதியை அளந்தனர். இதை பார்வையிடுவதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அங்கு சென்றார். அப்போது சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் முட்செடிகள், புற்கள் இருந்தன.

இதைபார்த்து அதிருப்தியடைந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், இதையெல்லாம் அகற்றாதது ஏன்?, உடனடியாக அகற்றுங்கள் என்றார். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் திருதிருவென விழித்தனர். இதனால் கோபமடைந்த அமைச்சர் கடப்பாரை கம்பி, மண்வெட்டி எதுவும் இல்லை. அமைச்சர் வரும் நிகழ்ச்சியில் முன்னேற்பாடு செய்திருக்க வேண்டாமா?, அடுத்து வரும் நிகழ்ச்சியின்போது நானே மண்வெட்டி, கடப்பாரை கம்பி எடுத்து வருகிறேன் என்று வருவாய்த்துறை ஊழியர்களிடம் கடிந்து கொண்டார். பின்னர் சுடுகாடு உள்ள பகுதியை வருவாய்த்துறை ஊழியர்கள் ஆய்வு செய்ததை பார்வையிட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், சில ஆலோசனைகளையும் கூறினார். வருவாய்த்துறை ஊழியர்களை அமைச்சர் கடிந்து கொண்ட வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்