முதல்-அமைச்சரின் கிராம மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2½ கோடியில் சாலை அமைக்கும் பணி அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

முதல்-அமைச்சரின் கிராம மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2½ கோடியில் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-19 18:45 GMT

செஞ்சி, 

தமிழக முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வல்லம் ஊராட்சி ஒன்றியம் ஆனத்தூர்-நெகனூர் இடையிலான சாலை ரூ.41½ லட்சம் மதிப்பீட்டிலும், பெரும்புகை சாலை ரூ.1 கோடியே 63 லட்சத்திலும், கலையூர்-மேல் ஒலக்கூர் சாலை ரூ.28 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான தொடக்க விழா அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது. இதற்கு வல்லம் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் பழனி, ஹேமமாலினி சவுந்தர்ராஜன், விமலா பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு, சாலை பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை.இளம்வழுதி, மாவட்ட கவுன்சிலர் அன்பு செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த தாஸ், சிலம்பு செல்வன், தி.மு.க. அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, கோபால், பாண்டியன், கண்ணன், பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்