தென்காசியில் விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந் தேதி தென்காசி வருகிறார். இதையொட்டி விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-08-27 19:00 GMT

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந் தேதி தென்காசி வருகிறார். இதையொட்டி விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உதயநிதி ஸ்டாலின் வருகை

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந் தேதி தென்காசிக்கு வருகிறார். அன்று காலை தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதை தொடர்ந்து தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடைபெறும் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மேலும் அன்று மாலை 5 மணிக்கு இளைஞரணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

குற்றாலம் கோவில்

அப்போது, தனுஷ்குமார் எம்.பி., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், ராஜா எம்.எல்.ஏ., நகரச் செயலாளர் சாதிர், ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், பெரியதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜா, முகேஷ், பொதுக்குழு உறுப்பினர் ரஹீம், செங்கோட்டை நகரச் செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் உடன் சென்றனர்.

பின்னர் குற்றாலம் கோவில் அருகில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உள்ளிட்டவர்கள் உடன் சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்