சார்பு நீதிமன்றம் விரைவில் செயல்படும் அமைச்சர் பொன்முடி தகவல்

திருக்கோவிலூரில் சார்பு நீதிமன்றம் விரைவில் செயல்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.;

Update: 2022-07-04 15:57 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூரில் சார்பு நீதிமன்றம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருக்கோவிலூர் வக்கீல்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மூலம் கோரிக்கை விடுக்கப்ப்பட்டது. கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் திருக்கோவிலூரில் சார்பு நீதிமன்றம் அமைத்து அதனை செயல்பாட்டுக்கு கொண்டுவர நிதி ஒதுக்கீடு செய்தும், அரசாணையையும் வெளியிட செய்தார்.

இந்த நிலையில் திருக்கோவிலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைய உள்ள சார்பு நீதிமன்றம் கட்டுவதற்கான இடத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், நகர தி.மு.க. செயலாளர் ஆர்.கோபி கிருஷ்ணன், அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு, மூத்த வக்கீல்கள் பொன் ராமதாஸ், அருணாசலம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்ந்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-

முன்னுரிமை அடிப்படையில்...

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது நான் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செய்து கொண்டு வருகிறேன். அதன்படி திருக்கோவிலூர் நகர சபையாக தரம் உயர்த்தப்பட்டது. திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. திருக்கோவிலூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது கூட சார்பு நீதிமன்றம் அமைப்பதற்கான அரசாணையோடு தான் இங்கு வந்திருக்கிறேன். சார்பு நீதிமன்றம் திருக்கோவிலூரில் விரைவில் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொகுதியின் வளர்ச்சிக்கு என்னென்ன பணிகள் தேவைப்படுமோ அதனையும் முன்னுரிமை அடிப்படையில் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று செய்து கொடுப்பேன். இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்