மலைவாழ் மக்கள் தேவைக்காக 14 கி.மீ நடந்து சென்று உதவி வழங்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஜருகுமலை மலைவாழ் கிராமத்திற்கு 14 கிலோ மீட்டர் நடந்து சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் தேவைக்காக இன்று முதல் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-07-03 01:43 GMT

சேலம்:

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஜருகுமலை எனும் மலைவாழ் கிராமத்துக்கு 14 கிலோமீட்டர் நடந்தே சென்று அங்குள்ள மக்களை சந்தித்தார். அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பாக சிறப்பாக செயல்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் அங்குள்ள மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா? என்று கேட்டு அறிந்தார்.

மலைவாழ் கிராம மக்கள், மக்களைத் தேடி மருத்துவம் மிகவும் பயனுள்ள திட்டமாக தங்களுக்கு அமைந்துள்ளது அதற்காக முதலமைச்சருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும், பிரசவத்திற்கு செல்வதற்கு பிரத்தியேக வாகனம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்,

உடனடியாக அதை செயல்படுத்தும் வகையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 108 ஆம்புலன்ஸ் ஒன்றை ஜருகுமலையில் நிறுத்தி மக்களின் தேவைக்கு பயன்படுத்துமாறு உத்தரவிட்டார். தங்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தந்ததற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்