நாகையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அடுத்த 4 நாட்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-11-25 12:42 GMT

சென்னை,

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே சுமார் 880 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும். இதன் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கனமழை எச்சரிக்கையை (ரெட் அலர்ட்) தொடர்ந்து நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்