திருப்பரங்குன்றம், மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு- நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்

திருப்பரங்குன்றம், மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்து நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

Update: 2023-07-23 21:10 GMT

திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திடீரென்று வந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் சுத்திகரிப்பு குடிநீர் வசதி உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.மேலும் வெளி நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்ததோடு டாக்டர்களின் சிகிச்சை குறித்தும், மாத்திரை மருந்துகள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

ஆய்வில் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதே போல் மேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வந்து திடீர் ஆய்வு செய்தார். மேலூர் அரசு தலைமை மருத்துவர் ஜெயந்தியிடம் சிகிச்சை அளிக்கப்படுவது தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் மேலூர் மருத்துவமனை வளாகத்திற்குள் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.மேலும் மருத்துவமனை வளாகத்திற்குள் நோயாளி சிகிச்சை பெறும் அறை, மருந்தகம், பிரசவ அறை உள்ளிட்ட அனைத்து அறைகளிலும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா மற்றும் மேலூர் தாசில்தார் செந்தாமரை, அரசு மருத்துவமனை டாக்டர்கள் முரளிபால்கண்ணன், கலைமணி, செந்தில்குமார் உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்