எம்.சூரக்குடி புரவி எடுப்பு திருவிழாவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சாமி தரிசனம்
எம்.சூரக்குடி புரவி எடுப்பு திருவிழாவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே உள்ள எம்.சூரக்குடியில் புரவிஎடுப்பு திருவிழா நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். கோவில் கவுரவ கண்காணிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில், சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் பூமிநாதன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும் பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், நகர செயலாளர் கதிர்வேல், சிங்கம்புணரி நகர அவை தலைவர் சிவக்குமார், நகர துணை செயலாளர் அலாவுதீன், மாவட்ட தொழிலாளர் அணி துணை தலைவர் ஞானி செந்தில், இலக்கியம் பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை தலைவர் செல்வகுமார், பிரதிநிதி புகழேந்தி, நகர பொருளாளர் செந்தில் கிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், நித்திய ஸ்ரீகிரீன் எனர்ஜி சிவசுப்பிரமணியன், பொன் சரவணன், பரிஞ்சி சரவணன், அழகுராசு, சூரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.