தியாகி இமானுவேல்சேகரன் மணிமண்டபம் கட்டப்படும் இடத்தை அமைச்சர் ஆய்வு

பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரனுக்கு ரூ.3 கோடியில் மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆய்வு செய்தார்.

Update: 2023-10-05 18:38 GMT

பரமக்குடி,

ரூ.3 கோடியில் மணிமண்டபம்

பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரனுக்கு ரூ.3 கோடியில் அவரது உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை திடலில் மணிமண்டபம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்த இடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துைற அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நேற்று நேரில் பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

மணிமண்டபத்துக்கான மாதிரி வரைபடத்தை நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வின், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல் மாறன் ஆகியோரிடம் கேட்டறிந்தார். அமைச்சரை, தியாகி இமானுவேல்சேகரனின் மகள் பிரபா ராணி, தேவேந்திரர் பண்பாட்டுக்கழக தலைவர் பரம்பை பாலா ஆகியோர் வரவேற்றனர்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

ஆய்வின்போது செய்தித்துறை இயக்குனர் மோகன், தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., நவாஸ்கனி எம்.பி., பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ. முருகேசன், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, துணைத்தலைவர் குணா, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், தாசில்தார் ரவி, போகலூர் யூனியன் துணைத்தலைவர் வக்கீல் பூமிநாதன், நகர்மன்ற கவுன்சிலர் வடமலையான், ம.தி.மு.க. பொருளாளர் எல்.ஐ.சி. ராஜ்குமார், தி.மு.க. மாநில தீர்மானக்குழு துணை தலைவர் திவாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், வக்கீல் சரவணகாந்தி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயக்குமார், சக்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜீவரத்தினம், மாலிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்பு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்