மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகளை அமைச்சர் காந்தி ஆய்வு

மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகளை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்

Update: 2022-07-29 17:48 GMT

ராணிப்பேட்டை முத்துக்கடையில் இருந்து மருதாலம் கூட்ரோடு வரை சுமார் 10.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்பொழுது 7 மீட்டர் அளவிற்கு தார் சாலை உள்ளது. அகலப்படுத்துவதன் மூலம் 15.6 மீட்டர் அளவு அகலத்துக்கு சாலை அமைய உள்ளது. இந்த பணி 8 மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ரூ.5.6 கோடி மதிப்பீட்டில் மாந்தாங்கல் வரை அகலப் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்கவும், தரமானதாக அமைக்கவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கோட்ட பொறியாளர் செல்வகுமார், உதவி கோட்ட பொறியாளர் பாலாஜி சிங், ஒப்பந்ததாரர் ரமேஷ் பிரசாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்