கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முகாமை அமைச்சர் காந்தி ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முகாம்களை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார்.;

Update: 2023-07-26 13:22 GMT

அமைச்சர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 643 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 484 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் முதற்கட்ட முகாம்கள் 365 ரேஷன் கடைகளில் நடைபெற்று வருகிறது. இதற்காக 2 லட்சத்து 27 ஆயிரத்து 918 விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அதில் 64 ஆயிரத்து 127 விண்ணப்பங்கள் இணையம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, வீ.சி.மோட்டூர், வாலாஜா, அம்மூர், நீலகண்டராயன்பேட்டை, சோளிங்கர், கூடலூர், பாராஞ்சி, பெருமாள் ராஜப்பேட்டை, அரக்கோணம், நெமிலி, வேட்டாங்குளம், நெடும்புலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், ஓச்சேரி, கொண்டாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் முகாம்களை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதிய உணவு ஏற்பாடு

அப்போது முகாமிற்கு வந்திருந்த பெண்களிடம் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் உங்கள் வீட்டிற்கு வந்து கொடுத்தார்களா?, டோக்கனில் குறிப்பிட்டிருக்கும் நேரத்தில் வந்திருக்கிறீர்களா? என கேட்டறிந்தார்.

இம்முகாம்களில் பணியாற்றும் 698 பணியாளர்கள், தன்னார்வலர்கள். வருவாய்த்துறையினர் ஆகியோருக்கு தன்னுடைய சொந்த செலவில் மதிய உணவு வழங்கப்படும் என்றார்.

ஆய்வின்போது கலெக்டர் வளர்மதி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகர மன்ற தலைவர்கள் சுஜாதா வினோத். ஹரிணி தில்லை, லட்சுமி பாரி, தமிழ்ச்செல்வி அசோகன், ஒன்றியக்குழு தலைவர்கள் சே.வெங்கட்ரமணன், நிர்மலா சவுந்தர், வடிவேலு, அனிதா குப்புசாமி, பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ், ரேணுகா தேவி சரவணன், கவிதா சீனிவாசன், லதா நரசிம்மன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்