கலெக்டர் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.;
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் ப 7 அடுக்கு மாடி கொண்ட புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இதனை வருகிற 21-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இந்தநிலையில் அமைச்சர் எ.வ.வேலு கலெக்டர் அலுவலக கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
கலெக்டர் அமர்குஷ்வாஹா, எம்.பி.க்கள் கதிர்ஆனந்த், சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, நல்லதம்பி, வில்வநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தனியார் பள்ளி மைதானத்தையும் பார்வையிட்டார்.