பஸ் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அமைச்சர் ஆறுதல்
பஸ் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அமைச்சர் ஆறுதல்
உடுமலை,
உடுமலையை அடுத்துள்ள சனுப்பட்டி அருகே நேற்று முன்தினம் அரசு டவுன்பஸ் எதிர்பாராதவிதமாக உப்பாறு ஓடையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடுமலை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று மருத்துவ மனையில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.அத்துடன் ஹார்லிக்ஸ், ரொட்டி, பழங்கள் ஆகியவற்றை வழங்கினார்.