வ.உ.சி.சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை

திருச்செந்தூரில் வ.உ.சி. நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2022-11-18 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் வ.உ.சி. நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வ.உ.சி. நினைவு நாள்

வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்க வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, கவுன்சிலர் செந்தில்குமார், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செல்வகுமார், தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சைவ வேளாளர் சங்கம்

வ.உ.சி. நினைவு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சன்னதி தெருவில் உள்ள சைவ வேளாளர் ஐக்கிய சங்க வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு நற்பணி மன்ற செயலாளர் செல்வ சண்முகசுந்தர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், சைவவேளாளர் சங்க தலைவர் ஆனந்தராமச்சந்திரன், செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் பொன்முருகேசன், வ.உ.சி. நற்பணி மன்றம் நிறுவன தலைவர் இசக்கிமுத்து மற்றும் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க.

பா.ஜ.க. சார்பில் வர்த்தக அணி மாநில தலைவர் ராஜாகண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட துணை தலைவர் செந்தில்வேல், நகர துணை தலைவர் மணி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கிரி, வர்த்தக நகர தலைவர் ஆனந், நகர பொது செயலாளர் மீனாட்சி, செயலாளர் சரவணன், நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் வசந்தி மற்றும் அம்மையப்பன், சதீஷ்குமார், முத்தையா, முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

திருச்செந்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் முருகேந்திரன் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கில் எஸ்.கே.சந்திரசேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் ஜெயந்திநாதன், மாவட்ட விவசாய பிரிவு காங்கிரஸ் பொருளாளர் கார்க்கி, மாவட்ட கலைப் பிரிவு தலைவர் செண்பகராமன், நகர துணைத் தலைவர் விஸ்வம்பண்ணையார், சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏரல்

ஏரல் காந்தி சிலை அருகே அலங்கரித்து வைக்கபட்டு இருந்த, வ.உ.சி. உருவப்படத்துக்கு ஏரல் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமையில் கட்சியனர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைப்புசாரா பிரிவின் மாவட்ட துணைத் தலைவர் முத்துமாலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், ஆர்.எஸ்..எஸ் சங்க பொறுப்பாளர் குருசாமி, வணிகர் பிரிவு ஒன்றிய தலைவர் விஜயராகவன், ஒன்றிய பொற்கொல்லர் நல வாரிய பிரிவு தலைவர் பம்பை பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆத்தூர்

ஆத்தூர் மெயின் பஜாரில் உள்ள சைவ வேளாளர் அபிவிருத்தி சங்க கட்டிடத்தில், வ.உ.சி.படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சங்க தலைவர் ஆண்டியப்பன், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆறுமுகநேரி விநாயகர் கோவில் தெருவில் உள்ள சைவ வேளாளர் அபிவிருத்தி சங்கத்திலும் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க தலைவர் சங்கரலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கயத்தாறு

கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் புதிய பஸ்நிலையம் முன்பு வ.உ.சி. 89-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு கயத்தாறு ஒன்றிய வ. உ.சி. பேரவைத் தலைவர் சங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவருடன் பேரவை துணை தலைவர் கந்தன், செயலாளர் செல்லத்துரை, துணை செயலாளர் சுடலை, அரசன்குளம் தி.மு.க. கிளைசெயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்