மகளிர் உரிமைத் தொகை மனுக்கள் பெறும் முகாமில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

மழுவேந்தி, மெய்யூரில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான மனுக்கள் பெறும் முகாமை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குதிகளை நிறைவேற்றி வருகிறார் என்றார்.

Update: 2023-07-26 09:58 GMT

வாணாபுரம்

மழுவேந்தி, மெய்யூரில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான மனுக்கள் பெறும் முகாமை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குதிகளை நிறைவேற்றி வருகிறார் என்றார்.

மனுக்கள் பெறும் முகாம்

வாணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மழுவம்பட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மனுக்கள் வழங்குவதற்கான முகாம் நடைபெற்று வருகிறது. அதற்கான ஆய்வு கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவ சங்கத் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.கம்பன், செங்கம் மு.ெப.கிரி எம்.எல்.ஏ., தண்டராம்பட்டு ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டுஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மனுக்களை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ வேலு பேசுகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலின் போது பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் காண உரிமை தொகை வழங்கப்படுகிறது. அதற்கான மனுக்கள் பெறும் முகாமை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாவட்டங்களில் இந்த முகாம்களை ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறதா? அவை முறையாக பதிவு செய்யப்படுகிறதா? என்று மாவட்டங்களில் அதற்கென்று தனி அலுவலர்கள் நியமித்து அதனை கண்காணிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரிட்டிருந்தார். அதன்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒதுக்கீடு

முதற்கட்டமாக ஏழு மாதங்களுக்கு இந்த திட்டத்தின்கீழ் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.ஆய்வின்போது வாணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன், துணைத் தலைவர் ஏழுமலை, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகர் சதா குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மகளிர் உரிமைதொகை காண மனுக்கள் பெறப்பட்டு அதனை முறையாக பதிவு செய்யப்படுகிறதா என்று அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்