கீழ்பவானி வாய்க்கால் உடைப்பு சீரமைக்கும் பணி: அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

கீழ்பவானி வாய்க்கால் உடைப்பு சீரமைக்கும் பணி: அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Update: 2022-12-22 21:19 GMT

பெருந்துறையை அடுத்த வாய்க்கால் மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் கரையில் கடந்த 10-ந் தேதி உடைப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து வாய்க்கால் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சீரமைப்பு பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் கூறுகையில், 'முதல்போக நன்செய் பாசனத்துக்காக கடந்த ஆகஸ்டு 12-ந் தேதி முதல் கடந்த 9-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 20 நாட்களுக்கு மேலும் தண்ணீர் திறப்பு வருகிற 29-ந் தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. வாய்க்கால் கரையில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. நாளை மறுநாள் அதாவது நாளை (சனிக்கிழமை) பாசனத்துக்காக வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும். அடுத்த 3 நாட்களுக்குள் கடைமடை பகுதியை தண்ணீர் சென்றடையும் வகையில் நடவடிக்கை மேற்ெகாள்ளப்பட்டு உள்ளது. தண்ணீர் புகுந்த விவசாய விளைநிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு பாதிப்பை பொறுத்து இழப்பீடு வழங்கப்படும். பவானிசாகர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை. அதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை,' என்றார்.

ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) உதயகுமார், உதவி பொறியாளர்கள் பவித்ரன், ஜெகதீஷ், சபரிநாதன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்