பெரியார்,அண்ணா சிலைக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாலை அணிவித்துமரியாதை

தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராக 2-வது முறையாக நியமிக்கப்பட்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தாராபுரத்தில் உள்ள பெரியார்,அண்ணாசிலைக்கு மாலை அணிவித்துமரியாதை செலுத்தினார்.

Update: 2022-12-03 17:50 GMT

தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராக 2-வது முறையாக நியமிக்கப்பட்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தாராபுரத்தில் உள்ள பெரியார்,அண்ணாசிலைக்கு மாலை அணிவித்துமரியாதை செலுத்தினார்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தி.மு.க. தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனை 2-வது முறையாக தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக நியமனம் செய்துள்ளார். இதையடுத்து புதிய பொறுப்பேற்ற அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று காலையில் 11 மணிக்கு தாராபுரம் வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் தொண்டர்களுடன் பழைய நகராட்சியில் அலுவலகம் அருகில் உள்ள அண்ணா சிலை அமைந்துள்ள இடத்திற்கு சென்றார். அங்கு அண்ணாசிலைக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினனர். அப்போது அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து செலுத்தினர். பின்னர் பெரியார் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது அமைச்சர்மு.பெ.சாமிநாதன் கூறும்போது " தி.மு.க. ஆட்சி கட்டுக்கோப்பான ஆட்சி எனவும், தனக்கு இரண்டாவது முறையாக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக பொறுப்பு வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன், மாவட்ட அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ். தனசேகர், தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன். தாராபுரம் ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சன்பாலு, நகர துணைச் செயலாளர் கமலக்கண்ணன் முன்னாள் எம்.எல்

ஏக்கள் சரஸ்வதி பிரபாவதி மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கே.செல்வராஜ், கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி, நகராட்சி கவுன்சிலர் ஹெடெக் அன்பழகன் மற்றும் வார்டு செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்