அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்

காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-07-22 18:53 GMT


காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம், காங்கயம்- சென்னிமலைச்சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், கலெக்டர் எஸ்.வினீத் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-

பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளான மகளிர் சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், வீட்டுமனை பட்டா, கால்நடை மருத்துவமனை, குடிநீர் வசதி, கோவில் புனரமைப்பு பணிகள், சமுதாயக்கூடம், சாலை வசதி, தடுப்பணை மற்றும் சிறுபாலம், தெரு விளக்கு, தொகுப்பு வீடுகள், நியாய விலை கடை, நிழற்குடை, பள்ளிக்கூடம், பால் கொள்முதல் நிலையம், பேருந்து வசதி, பொது கழிப்பிட வசதி, மயான வசதி மற்றும் வடிகால் வசதி ஆகிய பணிகள் மற்றும் தமிழக அரசின் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும்.

குறிப்பாக ஊரகப்பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது, தேவையான வேலை வாய்ப்புகள் அளிப்பது, வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற மக்களுக்கு தரமான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே ஊரக வளர்ச்சித்திட்டங்கள் அமைகின்றன. இந்த அரசின் தொடர் முயற்சிகள் வறுமையை ஒழித்து தரமான வாழ்விற்கு தேவையான அடிப்படைகளை நிர்ணயம் செய்யும்.

மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்தந்த பகுதிகளில் உள்ள பொது மக்களை நேரில் சந்தித்து பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் மனுக்களின் மீது அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து விரைவாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் பல்லடம் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை அமைச்சர் வழங்கினார்.

கூட்டத்தில் காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் டி.மகேஷ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி வரதராஜ், தாராபுரம் ஆர்.டி.ஓ.குமரேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், தொடர்புடைய துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்