நாமக்கல்லில் 1,128 பயனாளிகளுக்கு ரூ.96¾ லட்சம் கடன் உதவியை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல்லில் 1,128 பயனாளிகளுக்கு ரூ.96¾ லட்சம் கடன் உதவி- அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்

Update: 2022-06-08 18:18 GMT

நாமக்கல்:

75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி நாமக்கல்லில் பொதுத்துறை வங்கிகள் இணைந்து மாபெரும் கடன் வழங்கும் விழாவை நடத்தின. விழாவுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு 1,128 பயனாளிகளுக்கு ரூ.96 கோடியே 73 லட்சம் கடன் உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பொருளாதாரத்தில் ஏற்றம் அடைய வேண்டும், புதிய தொழில்கள் தொடங்கி வேலை வாய்ப்புகள் பெருகவேண்டும் என்பதற்காக கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு கடன் உதவி பெறும் அனைத்து பயனாளிகளும் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு, தங்களது தொழில் வளத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில் திருப்பூர் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீனிவாஸ், சென்னை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உதவி பொது மேலாளர் குமரன், யூனியன் பேங்க் ஆப் இந்தியா துணை பொது மேலாளர் செல்லதுரை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மண்டல மேலாளர் பட்சு பலராம்தாஸ், முன்னோடி வங்கி மேலாளர் சதிஷ், தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் ரவிசந்திரன் உள்பட வங்கி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்