தேயிலை கிலோவுக்கு ரூ.30 குறைந்தபட்ச கொள்முதல் விலை: கிராமங்கள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

தேயிலை கிலோவுக்கு ரூ.30 குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராமங்கள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Update: 2022-07-03 13:47 GMT

கோத்தகிரி

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் உள்ள அலுவலகத்தில் நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சிவகுமார், பொருளாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பச்சைத் தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காததால் சிறு விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளகி வருகின்றனர். எனவே பசுந்தேயிலை கிலோவுக்கு 30 ரூபாய் குறைந்த பட்ச கொள்முதல் விலையை நிர்ணயிக்க அரசை வலியுறுத்தி கிராமங்கள் தோறும் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்துவது, குடியிருப்புப் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகள் மற்றும் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி வனத்துறையினருக்கு மனு அளிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்