மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதல்; 3 பேர் காயம்

கள்ளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-10-01 18:45 GMT

கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ரமேஷ் (வயது 32). இவர் தனது மனைவி சத்தியபிரியா (30), மகள் கீர்த்தி (8) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டார். கோட்டைமேடு அருகே வந்தபோது, பின்னால் வந்த மினிலாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ரமேஷ், சத்யபிரியா, கீர்த்தி ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். .இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்