உளுந்தூர்பேட்டை அருகே 600 கிலோ ரேஷன் அரிசியுடன் மினிலாரி பறிமுதல் தப்பி ஓடியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

உளுந்தூர்பேட்டை அருகே 600 கிலோ ரேஷன் அரிசியுடன் மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-06-29 17:00 GMT

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூ.கள்ளக்குறிச்சி கிராமத்தில் சிலர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை வாங்கி மினி லாரியில் ஏற்றி கடத்திச் செல்ல முயன்று வருவதாக உளுந்தூர்பேட்டை வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உளுந்தூர்பேட்டை வருவாய்த்துறையினர் கூ.கள்ளக்குறிச்சிக்கு விரைந்து வந்தனர். ஜீப்பில் அதிகாரிகள் வருவதை பார்த்த ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் மினி லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மினிலாரியை சோதனையிட்டபோது, அதில் 600 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன் நின்ற மினி லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், விழுப்புரம் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வவைீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்