மணல் கடத்திய மினி டிப்பர் லாரி பறிமுதல்

குடியாத்தம் அருகே மணல் கடத்திய மினி டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-08-14 11:31 GMT

குடியாத்தத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கடத்தல் நடைபெறுவதாக வந்த தொடர் புகார்களின் பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் மேற்பார்வையில் வருவாய் ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் வருவாய் துறையினர் குடியாத்தம் அடுத்த ஜங்காலபல்லி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட மினி டிப்பர் லாரியை வருவாய்த் துறையினர் சுற்றி வளைத்தனர். அதிகாரிகளை கண்டதும் டிப்பர் லாரி ஓட்டி வந்த டிரைவரும், பணியாளர்களும் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அந்த மினி டிப்பர் லாரியை வருவாய்தறையினர் பறிமுதல் செய்சு குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்