ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் மினி மாரத்தான்

ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் மினி மாரத்தான் நடந்தது.

Update: 2022-08-04 20:21 GMT

75-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் மினி மாரத்தான் மற்றும் மரம் நடு விழா நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, திருச்சி ரெயில்வே கோட்ட உதவி மேலாளர் ராமலிங்கம் கலந்து கொண்டு, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து சுதந்திரத்திற்கு போராடிய வீரர்கள் நாராயணசாமி, வேலு ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். அதனைத்தொடர்ந்து பயிற்சி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்ற மினி மாரத்தானை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட துணை ரெயில்வே மேலாளர் ராமலிங்கம், திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ராமகிருஷ்ணன், துணை ஆணையர் ராஜையா, சிறப்பு 5 அணி பாதுகாப்பு படை ஆணையர் ஜெயஜோதிசர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். மாரத்தானில் தேசிய கொடியை ஏந்தியபடி ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை பயிற்சி பள்ளி வளாகத்தில் இருந்து ரேஸ் கோர்ஸ் சாலை, டி.வி.எஸ். டோல்கேட், காஜாமலை சாலை வழியாக மீண்டும் ரெயில்வே பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியை அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்