மினி லாரி-மொபட் மோதல்; தம்பதி பலி

ஒட்டன்சத்திரம், மே.9- ஒட்டன்சத்திரம் அருகே மினி லாரி மோதியதில் மொபட்டில் சென்ற தம்பதி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-05-08 17:17 GMT

தம்பதி பலி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 70). விவசாயி. அவருடைய மனைவி வேம்பாயி (60). நேற்று இவர்கள் 2 பேரும், சொந்த வேலை காரணமாக நவாமரத்துப்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.

ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில், லெக்கயன்கோட்டையை அடுத்த ரங்கநாதர் கோவில் பிரிவு அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் கோவை நோக்கி சென்ற மினி லாரி ஒன்று மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மொபட்டில் இருந்து பழனிசாமியும், வேம்பாயியும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் இறந்த பழனிசாமி, வேம்பாயி ஆகியோரது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ேமலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மினி லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மினி லாரி மோதி, மொபட்டில் சென்ற கணவன்-மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்