கனிம வளம் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும்- முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் அறிக்கை

கனிம வளம் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வலியுறுத்தி உள்ளார்

Update: 2022-10-23 18:45 GMT

பாவூர்சத்திரம்:

தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தினசரி லாரிகளில் அளவுக்கு அதிகமான எடையுடன் கனிம வளங்களை ஏற்றி செல்வதால் செங்கோட்டை நகராட்சி, குற்றாலம், மேலகரம், பேரூராட்சி மற்றும் அதன் சாலையோர கிராமங்களுக்கான தாமிரபரணி குடிநீர் திட்டம், தென்காசி நகராட்சி மற்றும் அதன் வழியோர கிராமங்களுக்கான தாமிரபரணி குடிநீர் திட்டம், சுரண்டை நகராட்சி மற்றும் கடையநல்லூர் நகராட்சிக்கான தாமிரபரணி குடிநீர் திட்ட குழாய்களிலும் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் மாசுபடுகிறது.

தமிழக கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் கடத்தப்படுவதால் எதிர்கால சந்ததியினருக்கு கனிம வளங்கள் கிடைக்காது என்ற நிலை ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கனிம வள கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்