இலை கருகல் நோயால் பல லட்சம் வாழைகள் பாதிப்பு

திருக்குறுங்குடி பகுதியில் இலை கருகல் நோயால் பல லட்சம் வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

Update: 2022-12-25 20:28 GMT

ஏர்வாடி:

திருக்குறுங்குடி பகுதியில் இலை கருகல் நோயால் பல லட்சம் வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இலை கருகல் நோய்

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி, மாவடி, மலையடிபுதூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் வாழைகளை பயிரிட்டுள்ளனர். தற்போது இலை கருகல் நோயால் பாதிக்கப்பட்டு பல லட்சம் வாழைகள் வதங்கி காணப்படுகிறது. நடவு செய்யப்பட்டு 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாழைகளை இலை கருகல் நோய் (பழுப்பு நோய்) தாக்கி வருகிறது.

இந்த நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள் பழுத்து, மஞ்சள் நிறமாகி, பின்னர் கருகி விடுகிறது. இதனால் வாழைகள் முழுவதுமாக சேதமடைகிறது. இலை கருகல் நோயினால் வாழைத்தார் திரட்சியாக இருக்காது என்றும், மகசூல் பாதிக்கும் என்றும் கூறுகின்றனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் குழப்பம்

மண் பாதிப்பால் இலை கருகல் நோய் ஏற்பட்டுள்ளதா? இலை கருகல் நோய் தாக்க காரணம் என்ன? என்பது தெரியாமல் விவசாயிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பெரும்படையார் கூறுகையில், "எப்போதும் இல்லாத அளவிற்கு இலை கருகல் நோய் பரவி வருகிறது. ஒட்டு மொத்த நோய் தாக்குதலால் வாழைத்தார் விளைச்சல் கடுமையாக பாதிக்கும் என்பதால் மாவட்ட வேளாண்மை துறையினர் நடவடிக்கை எடுத்து களக்காடு பகுதியில் ஆய்வு செய்து இலை கருகல் நோய் எதனால் பரவுகிறது? என்பதை கண்டறிந்து அதற்கான மருந்துகளையும் பரிந்துரைக்க வேண்டும்.

நெல்லுக்கு இருப்பதை போல் வாழைகளுக்கும் ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். களக்காட்டில் வாழைத்தார்களை பதப்படுத்தும் நிலையம் அமைக்கும் பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்