ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புதுப்பட்டி காந்தி தெருவை சேர்ந்தவர் குமார மோகன் (வயது 54). இவர் மில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் ரோட்டில் சைக்கிளில் சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்து போனார். இதுகுறித்து அவரது மனைவி ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டிபோலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த யுவராஜ்(26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.