மொபட் மீது பால் வேன் மோதி லாரி டிரைவர் சாவு
குளித்தலை அருகே மொபட் மீது பால் வேன் மோதி லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.;
டிரைவர் பலி
கரூர் மாவட்டம், தோகைமலை பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 46). லாரி டிரைவர். இவர் நேற்று நாமக்கல்லில் இருந்து தனது சொந்த ஊரான தோகைமலைக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். குளித்தலை- மணப்பாறை சாலையில் அய்யர்மலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் எதிரே வந்த பால் வேன் குமாரசாமி மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட குமாரசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வழக்கு
இதுகுறித்து தகவல் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் குமாரசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.