ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சி

ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சி நடந்தது.

Update: 2023-08-10 19:34 GMT

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய படைக்கலன் தொழிற்சாலைகளில் ஒன்றான எச்.இ.பி.எப். (உயர் ஆற்றல் திட்ட தொழிற்சாலை) (எச்.ஏ.பி.பி.) தொழிற்சாலையில் ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சி நேற்று நடந்தது. இந்த கண்காட்சியை பொது மேலாளர் கியானேஷ்வர் தியாகி தொடங்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாட கருவிகள் இடம்பெற்றன. பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கண்காட்சியை பார்வையிட்டு ராணுவ பயன்பாட்டு கருவிகளின் உற்பத்தி மற்றும் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் ெபாது மேலாளர் கியானேஸ்வர் தியாகி கூறுகையில், நாட்டின் 76-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தற்சார்பு இந்தியாவை பறைசாற்றக்கூடிய வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தி பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாட பொருட்களின் கண்காட்சி இன்று(நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொழிற்சாலை வளாகத்தில் புதிதாக ஒரு யூனிட் தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது அது பரிசோதனை அடிப்படையிலேயே செயல்படுகிறது. பரிசோதனை நிறைவு பெற்ற பின் அதற்குரிய ஆட்களை தேர்வு செய்து பணியில் அமர்த்தி, தொடர்ந்து அந்த யூனிட்டில் உற்பத்தி தொடங்கப்படும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்