நுண்ணீர் பாசன விழிப்புணர்வு முகாம்
சீயாத்தமங்கையில் நுண்ணீர் பாசன விழிப்புணர்வு முகாம் நடந்தத.
திட்டச்சேரி:
நாகை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் (பொறுப்பு) கண்ணன் அறிவுறுத்தலின் பேரில் சீயாத்தமங்கை கிராமத்தில் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருமருகல் தோட்டக்கலை அலுவலர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இதில் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் விவசாயிகளிடம் நுண்ணீர் பாசனத்திற்கான விண்ணப்பங்களை பெற்று நுண்ணீர் பாசனம் அமைப்பதன் அவசியம் மற்றும் மானியம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். இதில் 100-க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.